வானவில் அழகான காலம் போய் - உன்
வாசல் கோலம் அழகான காலமிது
கவிதை எழுதும் போதெல்லாம் - பேனா
உன் பெயர் எழுதும் நேரமிது.
வார்த்தைகள் ஆயிடம் கோர்த்தாலும் - உன்
பெயர்போல் கவிதை இன்னும் இல்லை
வான் மதி எழுகின்ற போதெல்லாம் - உன்
புன்னகையுடை வதனமாகிற வேளையிது.
இவைகள் காதலின் ஆரம்பமா - இல்லை
காரணம் நீயா.
புதிய பரிணாமம் படைக்கிறது என் - இதயம்
புரியாமல் தாழம் போடுகின்றன இமைகள்
புதிதாய் ஏதோ உணர்கிறது உள்ளம் - இருந்தும்
புரிந்ததும் இப்போது புரியவில்லை.
www.kuviyalkal.blogspot.com
No comments:
Post a Comment