வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

நீலவானம் நீ







வெண்ணிலா அழகென்பர் - என்
பெண்ணவளை காணாதோர்.

மின்னிடும் பொன் அழகென்பர் - அவள்
நகப்பதை கண்ண்டிராதோர்.

குங்குமம் சிவப்பென்பர் - தேவதை
இதழினை பார்க்காதோர்.

குயிலிசை இனிதென்பர் - அன்பே
உன் குரலினை கேளாதோர்.

கயல் அழகென்பர் - உன்
கரு விழியினை காணாதோர்.

காரிருள் அழகென்பர் - உன்
கலைந்த கூந்தலினை காணாதோர்.

மொத்தத்தில்

உன்னை காணாதோர்
மட்டும்தான் இவ்வுலகம் அழகென்பர்...








www.kuviyalkal.blogspot.com

No comments: