நான் ஏமாந்தது உன்னிடம் மட்டும்தான்.
பெண்மையை நம்பவில்லை
உன்னை நம்பிநேன் நானும்.
பழகிய காலமெல்லாம் பகலும்
இரவுமாய் கழிந்தன.
கண்களில் நீரை வரவழைத்தது நீ.
கவிதை எழுத தூண்டியது உன் காதல்.
நடுத்தெருவில் நின்ற எனக்கு
நல் வழி கொடுத்தது நீ.
வெயிலில் தெரியும் நிழலின் அருமை-இப்போது
பிரிவில் தெரிகிறது உனதருமை.
காதல் பொய்யானது அது - என்னையும்
தன் காலிற்குள் போட்டு விட்டது
மெல்லவும் இயலாமல் விழுங்கவும் -முடியாமல்
விக்கி நிற்கிறேன் நானும்
உள் மூச்ச்சே போய்விட்டது ஆனால் - இதயமோ
மேல் மூச்சு கேட்கின்றது
இப்போது,
பூஞ்செடிகள் வளர்க்கிறேன் அவைகள் - உன்
புன்னகையை தினமும் எனக்காக பூக்கட்டுமென்று
வீட்டுக்குருவிகள் இரண்டு -தினமும்
காலையில் என் வாசலில் எப்போதும்
உன் பெயரை ஞாபகப்படுத்திக்கொண்டு
காதலித்த காலம் போய் கண்கலங்கும் நேரமிது
நிஜமான உன் நினைவுகள் இன்று கனவாக
போய் விட்டன
நினைவுகளை மட்டும் மூட்டையாக
சுமந்துகொண்டு .
நிழல் நீ இன்றி போகிறேன் நான் மட்டும்
www.kuviyalkal.blogspot.com
No comments:
Post a Comment