நீண்ட நாட்களின் பின்பு நேற்று
கல்விச்சான்றிதழ்களை புரட்டிப்பார்த்தேன்.
உடுப்புப் பெட்டியினடியில்
நீ முதன் முதலில் தந்த கறுப்பு வெள்ளை
தேசிய அடையாள அட்டை புகைப்படம்.
பதினந்து வருடங்களின் பின்பும்
பத்திரமாக என்னோடு.
சான்றிதழ்களிற்கு சமனாக பத்திரப்படுத்தும்
பொக்கிசங்களில்அந்த கறுப்பு
வெள்ளை புகைப்படமும்.
பிறந்த்த பறவையின் குஞ்சு சிறகடித்து பறக்க
நினத்ததுபோல் நானும் ஆசைப்பட்டேன்.
சிறகுகளை அசத்துப்பார்த்தேன்
நடக்க மட்டுமே முடிந்தது.
ஆனால் அன்று பிறந்த போதே பறந்தேன்
காதலித்தேன் நானும் பள்ளிப்ப்பருவத்தில்.
பதினாறில் நான் கற்றத்து
உன்னிடத்தில் பலகோடி
ஈழப்போரின் நடுவிலும்
பூப்பறித்தது என் காதல்
உன் வருகையை எதிர்பார்த்து
தினமும் கால்கடுக்க காத்திருந்தது..........
கல்விநிலைய மேசையில் உனக்காக
கொப்பி வைத்து இடம் பிடித்தது................
பாடசாலையின் பின் உன் வீடு வரை
வழி அனுப்பி வத்தது...............
100M ஓட்டப்பந்த்தயத்தில் வெற்றிக்களிப்பில்
நீ வந்த்து வாழ்த்தியது................
கோயிலில் நீ கும்பிடும் போது குறிபார்த்து
உன் முன் நின்றது.................
நீ வரும் வழியின் சந்தியில் உன் புன்சிரிப்புக்காய்
காத்திருந்த்த நேரங்கள்...............
குடை இருந்த்தும் மழை விடும்வரை சாட்டு சொல்லி
திண்ணையோரம் ஒதுங்கியது..............
சொல்லிட இன்னும் தொகயாக உள்ளது
நினைத்து விட்டு நிம்மதி அடைகிறேன்.
No comments:
Post a Comment