வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

க‌ண்க‌ள் சொல்லும் காத‌லை உத‌டுக‌ள் ம‌றுத்தாலும்

உச்சி பிளக்கிறது வெயில்
ஊற்றெடுக்கிறது வியர்வை
பற்றி எரிகிறது மேனி
பலதும் பார்த்து நடக்கிறேன் சலையில்...

முந்தானை நிழலில் ஓர்
சிறுமியை அரவணைத்தபடி
நடு வெயிலில் சுடு மணலில்
செருப்பின்றி ஓர் தாய் போகிறாள்
செந்தணல் வெயிலிலும் அகம் குளிர்ந்த்தது..........

ம‌றுபுற‌ம்,
த‌லை ம‌ட்டும் குடையினுள்ளே
ஓர் காதல் ஜோடி
த‌ர‌ணியெல்லாம் பார்க்கையில்
சுடும் வெயிலிலும் சிங்கார‌மாக‌..........................

ச‌ற்றுப் ப‌க்க‌த்தில்
ந‌க‌ர‌க்க்க‌டையின் தாழ்வார‌த்தில்
நாம் இருக்க‌மாட்டோம் ஓரிரு நிமிட‌ம்
சாக்க‌டை கான‌ருகில் ஒய்யார‌மாக‌
ச‌த்த‌ம் போடும் வாக‌ன‌ங்க‌ள் ந‌டுவே
ப‌ள்ளிகொள்ளும் ஓர் பிச்சைக்கார‌ன்
அவ‌னும் வெயிலோடு................................

க‌ட‌க்கிறேன் சாலையை
செல்லிட‌ த‌லைபேசியினை க‌ட்டி
அணைத்த‌படி எல்லா வ‌ர்க்க‌மும்
குளிர்மென்குழ‌ம்பு வியாப‌ரிக‌ள் கூவிக்கெண்டு
குச்சி மிட்டாய் வ‌ங்கி குதித்து விளையாடும் சிறார்க‌ள்
எல்லோரும் வெயிலை க‌ண‌க்கெடுக்காம‌ல்....

இவ‌ற்றின் ந‌டுவே,
மின்ன‌லாய் உன் வ‌ருகை
க‌ண்ட‌தும் த‌ள்ளி நின்று பார்க்கிறேன்
உன் க‌ண்க‌ள் என்னை தேடுவ‌தை
கிள்ளிப்பார்க்கிறேன் நிஜ‌ம்தானா?
முத‌ன் முத‌லில் இன்றுதான் அனுப‌விக்கிறேன்
வெயில் கூட‌ குளிருமென்று.




No comments: