பெண்,
உண்டானதும் அதனால் உயிர் போவதும் அதனால்,
பிறக்கும் போது "பெண்பிள்ளை"
சிறு வயதில் பெண் எனக்கு சிறுமி,
சில காலங்களில் சகோதரி,
அன்புடன் பழக நண்பி,
வயதன்று கூடினால் அக்கா,
விடலைப்பருவத்தில் காதலி,
மூன்று முடிச்சின் பின் மனைவி,
சின்னம்மா,பெரியம்மா,பாட்டி இன்னும் பூட்டி..
இன்னும் சொந்தம் இவ்வுலகில் இருந்தாலும்
பிறப்பு முதல் என் நாவில் மாறாத வாசகம்
என் அம்மா.
அம்மா எனும் வாசகம்,
அன்பின் உயிர்,
முன்னேற்றத்தின் பிறப்பிடம்,
நன்மையே நினைக்கும் ஒரு நாதம்,
நாளெல்லாம் அயராத இமைகள்,
பொறுமையில் பூமியிலும் மேன்மை,
வயிறு வெறுமையானாலும்
வரளாதன் உன் தாய்ப்பால்,
வார்த்தை இல்லை தமிழில் வர்ணிக்க..
தாய்மை என்பது மனிதனுக்கு மட்டுமல்ல,
உயிருள்ள எல்லா ஜீவனுக்கும்.
மண்ணை ஆண்டோர் மண்ணிலும் கோடி
அம்மா அதை ஆள இதுவரை யாருமில்லை
அம்மா அதுதான் சுருக்கமாக
கடவுள்,
உயிர்,
மந்திரம்,
வேதம்,
அன்னையர் தினத்துக்கு எல்லா அம்மாக்களுக்கும் என் சமர்ப்பணம்.
No comments:
Post a Comment