நான் சிறுவனாக இருந்தபோது,
பட்டாம்பூச்சி
பக்கத்துவீட்டு நாய்க்குட்டி
பழைய தேய்ந்த டயர்
உடைத்த சிரட்டையில் கூட்டாஞ்சோறு
உறவென்று சொல்ல மணல் வீடு
மழை வரும்போது வீட்டின் திண்ணை
மழை நின்றும் செம்மண் வீதி நீரில்
ஆனந்த தாண்டவம்.
ஓட்டை கூரை சூரிய ஒளியில்
படமெடுக்கும் கமெரா.
குருத்தோலை மணிக்கூடு
அடுப்பங்கரை கரியில் மீசை
அடங்காத போது அப்பாவின்
புளியங்கேட்டியின் அடி.
காலையிலும் மாலையிலும்
குளிப்பாட்டும் தாய்.
காய்ச்சலில் அன்னையின் மடியும்
உப்புக் கஞ்சும்.
வெயிலில் விளையாட்டு மைதானம்.
செட்டியூர் கடற்கரை
சிதறிய கதிர் பொறுக்க
அம்மன் கோயில் வயல் வெளி.
சிறுபிள்ளை தூண்டில் போட
எனது ஊர்க் குளம்.
இன்னும் வளரும் பருவமடா என வாங்கிய
பாடசாலை பெரிய சப்பாத்து.
இடுப்பு பெருக்கும் வயதென்று தைத்த
பெரிய நிலக் காற்சட்டை.
கூடிய "மிக நன்று" வங்கிய
தமிழ்க் கொப்பி.
ஆண்டு ஒன்றில் விருது வாங்கிய
புகைப்படம்.
பாடசலையின் பின்வழியில் புளியங்காய்
மாங்காய் எறிந்த நண்பர்கள்.
வாழைக்காலை தோப்பில்
இள நீர் திருடிய காலம்.
எனது ஊர் கடற்கரையில்
நண்டு கிண்டியது.
அம்மாவின் கைக்குத்தரிசிச் சோறு
தென்னை ஓலயில் சமைக்கும் மண் சட்டி
சீனி சாப்பிட கொச்சிக்காய்
கடித்து விட்டேன் என்ற நடிப்பு
பாடசாலை அடி தடி சண்டைகள்
இப்போது தனிமையில் இவற்றை எல்லாம்
நினைத்துக்கொண்டு.
பத்து வயது மட்டும் போதும் எனக்கு இவ்வுலகில் வாழ.
பதினாறு வேண்டாம் பாழ்படலாம் பெண்ணால்!
No comments:
Post a Comment