விடியுமா என வெறுப்புடன் கழிக்கும்
-விடியா இரவுகள்.
காலை எழுந்ததும் உன்னை காண
-துடிக்கும் விழிகள்.
காலை வெயிலில் உன்னை காண
-காத்திருக்கும் பாதங்கள்.
கண்முன்னே வரும்போது கதைக்க எண்ணி
-சிறைப்பிடிக்கும் வார்த்தைகள்.
உன் விம்பம் மறையும்வரை பார்க்கும்
-அந்த நிமிடங்கள்.
ஆயிரம் கோடி வார்த்தைகள் இருந்தும் தொலைபேசியில்
-தடுமாறும் உதடுகள்.
உன்னை காணும்போது தலைகால் புரியாமல்
-தத்தளிக்கும் தடுமாற்றம்.
வேலை இல்லாவிடினும் உன்னை பார்க்க அமைக்கும்
கடிகார முட்கள்.
போகிறேன் என்று நீ விடை பெற்றும் உன்னை
-நினக்கும் ஞாபகங்கள்.
இத்தனையும் ஏனோ என்னோடு...
தினமும் காலையில் (நகை)த்து விட்டு மட்டும் போகிறாய்,
உன்,
புன்(நகை)யை என்னிடம் மட்டும் (அடகு) வத்துவிட்டு.
No comments:
Post a Comment