வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

முகம் என்னும் ஓவியம்


முதல் முதல் கவிதை எழுத முனைந்தேன் - நானும்‍‍‍
மையலே உன்னை மனதினில் நினைத்தேன்
ம‌றைந்த‌து என் க‌ண்க‌ள் ம‌ய‌க்க‌மா - இதுவும்
மைய‌லே என் பொய்ய‌லே..........


காகிதம் எனங்ஙனும் ஏன் வெள்ளை - என்று
மேலும் கீழும் கிறுக்கினேன்
அழகான வரிகள் என முதலில் - கிடைத்தது
உன் அழகிய கண்கள் இரண்டும்

ஆதவன் போகும் அழகிய வானம் - நிதம்
அமைந்திடும் வர்ணம் கண்டேன்
அன்போடு என்னை அத்தான் - என்னும்
உன் கொவ்வை இதழ் போல் இல்லை

ஏர் கொண்ட கூர் போல் - என்றும்
இயல்பான மூக்கு உனக்கு
பரந்த வானில் பளிச்சிடும் நிலா - போல்
உன் வதனமெனும் றோஜா

காரிருள் என நடு வெயிலில் மூடின - கண்கள்
உன் கருங்கூந்தல் கலைந்ததும்
வரைகின்ற கவிதைக்கு வரிகள் - தேடினேன்
ஒரு முகவரி கொடுப்போம் என‌

கணப்பொழுது ஒன்று கடந்ததும் - என்
கடிகாரம் ஒலித்து கணீர் என‌
ஒரு நாள் கடந்து மறுநாள் வரை - நன்பா
நீ உன் நினைவில் இல்லை என்று

நள்ளிரவு தாண்டி தனிமயில் - நானும்
ந‌ற்சுவை தேனீரும் இன்றி உண‌ர்ந்தேன்
நான் வ‌ரைந்த‌து க‌விதை அல்ல‌ - உன்
அழ‌கிய‌ முக‌ம் என்னும் ஓவிய‌ம் என்று.

No comments: