வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பார்த்ததும் பிடித்தது


கனவில் கூட நினைத்ததில்லை - நீயென்
காதலியாவாய் என்று
அள்ளி அணைத்திட துடிக்கிறேன் - உன்னை
ஓர் ஆடை போல‌

அழகான பெண் கண்டால் அன்றொரு - நாளில்
அலைபாயும் உள்ளம்
அழகெல்லாம் வெறும் பொய் அன்புதான் - உலகில்
உண்மையென்றது உன் காதல்

வழ வழ வென்று கதைக்கிற எனக்கு - நீ
வரும்போது மட்டும் மெளனம்
விஷ‌ம் உள்ள கண்ணாள்(ல்) - நீ
விதைக்கும் கதைகள் ஆயிரம் ஆயிரம்

பார்த்ததில்லை உன் கண்போல் - இப்
பாரினில் இதுவரை

மஞ்சள் முகமும் மயக்கும் குங்கும இதளும்
சிறப்பான காதும் சிவந்த கன்னமும்
ஒரப்பார்வையும் ஒய்யார நடையும்
நிமிர்ந்த மார்பும் நேரான கழுத்தும்
எடுப்பான இடையும் எழிமையான தோழும்

போதுமடி உனக்கு அழகு சேர்க்க - ஆடை
அணிகலன் இல்லாமல்
இதுவரை நினைத்ததெல்லாம் - வாழ்வில்
இப்படி ஒரு பெண்மை இல்லை என்று

புன்னகைத்து மட்டும் போகிறாய் - பெண்ணே
புரியவில்லை இன்னும்
பார்த்ததும் பிடித்தது.

நானாக மட்டும்
காதலிக்கிறேன் உன்னை

No comments: