வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

புரியவில்லையா இன்னும் உனக்கு


சாகும் வரைக்கும் உன்னுடன்
சங்கமமாக வேண்டும் என்பதும்
சரித்திரம் படைக்கிறபோது
என்னுடன் நீ
இருக்க வேண்டும்
என்பதும்
சின்னச்சின்ன உன்
சிதறல்களில்
நான் மட்டும்
வேண்டும் என்பதும்
இமை கொட்டும் பொழுதிலும்
உன் விம்பம்
மறைந்து விடக்கூடாது என்பதும்
கை பிடித்து சாலை நடுவே
உன்னுடன்
நடக்க வேண்டும் என்பதும்
காலையில் எழுந்ததும்
தினம்
உன் உன் முகம்
பார்க்க வேண்டும் என்பதும்
கனவிலும் கூட
உன்னை மட்டும் தான்
காண வேண்டும் என்பதும்
களைப்பான நேரம்
தலை சாய்க்க
உன் மடி வேண்டும் என்பதும்
முகம் துடைக்க சேலை
உன் நுனி வேண்டும் என்பதும்

புரியவில்லையா இன்னும் உனக்கு.....

No comments: