வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

நீ வருவாயென..


அந்தி முதல் அதி காலை வரை அன்பே
உன்னை மட்டும் சுவாசித்தது சொர்க்கம்.
ஆயுள் முடிந்து கட்டை ஏறினாலும் அன்பே
உன் நினைவு அழியாதடி!


விடியும் வரை என் உயிரோடு
உறக்கத்தை களவாடியவளே
விளையாட்டாகக்கூட நீ சொல்வதையும்
என்னால் தாங்கவொண்ணாதடி!


காதல் செய்வது பாவமல்ல உன்னைப்போல்
காதல் கொன்றோர்தான் பாவிகள்.
என் மனது உன்னை மட்டும்தான் சிறைப்பிடித்துள்ளது
இறுதிவரை அங்கு உனக்கும் எனக்கும்ஆயுள் தண்டனை


இடைக்காலத்தில் குழந்தைகளுடன் நீயும் நானும்...........
இறுதியில் பாட்டன் பாட்டியாக‌............
இடை நடுவே என்னில் சரி பாதியாக‌...........
இப்போது என் பிள்ளை நீயாக‌........
கடுங்குளிரில் நீ மட்டும் கம்பளியாக‌..........

என் பெயரில் முதல் சொல் நீயாக‌..........
நான் நடக்கும் தடங்களில் ஒன்று உனதாக‌...........
படுக்கை விரிக்கும் பாய் உன் கூந்தலாக‌..........
இருளில் பார்க்கும் சூரியன் முத்துப்பற்க‌ளாக............
கண்மூடும் போதெல்லாம் தாலாட்டாக‌...........

இரவில் தனிமையில் ஆடையாக‌..........
கொட்டும் மழையில் குளிராக‌...........
கடும் வெயிலில் நிழலாக‌..........
நெடுந்தூர பயணத்தில் வழிகாட்டியாக‌.........
மனதில் நீ மட்டும் நிறைவாக‌...........

என் பிள்ளையின் மழலையாக‌.........
விருப்பு வெறுப்புக்களில் நண்பனாக‌.........
வலுவிழந்தாலும் அரவணைக்க அன்னையாக‌.........
ஆக்கத்திலும் ஊக்கத்திலும் தந்தையாக‌........
அறிவுரை சொல்ல ஆசானாக‌..........
ஆக்கிரமிப்பதில் சுனாமியாக‌...........
சினம் கொள்கையில் சிறுமையாக‌..........
மொத்தத்தில் என்னை ஆழும் அரசியாக!!!!!!

என்றெண்ணியிருந்தேன்.....

இறுதிவரை வருவேன் என்று
இடை நடுவில் கை விட்டாயே!
இறந்தாலும் விழித்திருக்கும் என் விழிகள்


நீ வருவாயென‌.................................!

No comments: