சூரியன் சாய
மலர்கள் வாட
இளந்தென்றல் உரச
குருவிகள் கூட குடும்பமாய் கூடு செல்ல
தனிமையாய் நான் மட்டும்
யன்னல் கம்பிகளை எண்ணிக்கொண்டு
பேருந்தில் கூட்டம் நிரம்பிவளிய
ஏச்சுக்கள் பேச்சுக்களோடு
வீதிகள் விபத்துக்களால் களை கட்ட
விளக்குகளால் வீடுகள் ஒளிபெற
தனிமையாய் நான் மட்டும்
யன்னல் கம்பிகளை எண்ணிக்கொண்டு
உலக சிறையிலிருந்து
உயிர் பூட்டை உடைத்துக்கொண்டு
ஓடவுமுடியாமல் உயிர்
சேரவுமுடியாமால்
ஆயுள் கைதியாய் உன் நினைவில்
தனிமையாய் நான் மட்டும்
யன்னல் கம்பிகளை எண்ணிக்கொண்டு
No comments:
Post a Comment