வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

என் அன்பானவழுக்கு..

இந்த படைப்பின் சுருக்கம்.....

தன் காதலியை சந்திக்க பகலில் நேரமில்லை நாயகனுக்கு,காதலியிடமும் சொல்லாமல் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி, இரவில் காதலியின் வீட்டு மதில் ஏறி குதித்து நாய் கடி வாங்கி விட்டார்,நாயகன் வைத்தியசாலையில் இருக்கும் போது எழுதிய கடிதம்...


சித்திரை 3ம் பிறை


என் இனியவளே,



தென்னை இளங்கீற்றினிலே
தென்றல் தீண்டும் வேளையிலே
மெல்லென்வே நானும்
மேனிய‌ழகை சரிபார்த்து
சொலிக்கொள்ளாமலே சோடியவள்
உன்முகம் காண‌
முக்காடு போட்டு முகமூடிக்
கொள்ளையர் போல்
மதிலேறிக் குதித்தேனடி...
கட்டிய சாறன் கம்பி வேலியில்
ஒற்றைச் செருப்பு என்னுடன்
இடுப்பின் கீழே ஆழ‌மான‌ அடையாள‌ங்க‌ள்
பதம் பாத்த உன் நாயோ
படுக்குதடி உன் திண்ணையில்
படுபாவி நானல்லோ
பரிசாரி வீட்டினிலே.

இனியென்ன நான் எழுத
எலாம் அவன் கையில்.




இப்ப‌டிக்கு

காத‌ல‌ன்..

No comments: