வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

என் பயணத்தில்



பெரிய கப்பலாய் இல்லாவிடினும்

என் அளவிற்கு சின்னதாய் ஒரு தோணி
அழகாய் அமைதியாய்
தொடங்கினேன் பயணத்தை


அலைகள் _பனி மலைகள் _புயல் மழைகள்
சுழல் காற்று சூறாவளிகள்
சுனாமிகள் தாண்டி

ஆழங்களின் அதிசயங்கள் அழைக்க
செல்கிறேன்..................


அலைகளில் அமிளும் போது
மேலெளுவேன் என்ற நம்பிகை
மேலெளும் போதோ
உலகத்தை வென்று விட்ட உண்ர்வு

சோர்வுகள் _ சோகங்கள்
தனிமைகள் _ தவிப்புகள்
தளராமல் கரையை தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைக்கவில்லை இன்னும்


என் தோணி கானல் நீரில் நீந்தும்
காகித தோணி என்பதால்

No comments: