வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

மொழி பேசும் விழிகள்

குழந்தையாய் உனை யாரும் ரசிக்காத அளவிற்கு
மறைந்திருந்து பார்த்த என் கண்கள்
என் முக வாசல்களை மூடி தப்பிக்க முயன்ற போது
என் மனதை படம் பிடித்துக் காட்டிய ‍என் கண்கள் என் கண்ணீர் துழிகள் கீழே விளுமுன் உன் கரங்கள் அதை
ஏந்தாதா என்று எதிர் பாத்திருந்த ‍என் கண்கள்
உன் இமைக்குள் விளுந்து கிடக்கின்றேன் விடுவித்து
உயிர் பிச்சை தர மாட்டாயா என்று ஏங்கிய ‍என் கண்கள்
நான் இறந்தாலும் நீ வருவாய் என
விழித்திருக்கும் ‍என் கண்கள்
காற்றை கூட உனை நெருங்க விடமாட்டேன் என
அனுமதி மறுத்த‌ ‍என் கண்கள்
என்னவனில் அவள் சேலை நுனி பட்டதால்
அவளை சுட்டெரிக்க துடித்த என் கண்கள்
எனை மறந்து உனை
பறித்த என் கண்கள்

வெட்டில் பூச்சியாய் உன் ஒளியில்
மடிய துடித்த என் கண்கள் பார்ப்பவர்களில் எல்லாம் உனை கண்டு
குளம்பிப்போன என் ‍என் கண்கள்

உனை தொடாமல் என் விழியில் விழுந்த் முடியை
கூட தடுத்து விட்ட என் கண்கள்

நிழலாய் எனை தொடர்கிறாயா என்று
அடிக்கடி திரும்பி பார்த்த என் கண்கள்

No comments: