கோயிலடி என்று இறக்கிவிட்டான் BUS நடத்துனர்.
இறங்கிய எனக்கு என் வீட்டை
ஆலமரம் காட்டிக்கொடுத்தது.
கால்களில் முள் தைத்ததைக்கூட
பொறுப்பெடுக்காமல் நடந்து நெருங்கினேன்
என் வீட்டை பழைய நினைவுகளுடன்.
இறங்கிய எனக்கு என் வீட்டை
ஆலமரம் காட்டிக்கொடுத்தது.
கால்களில் முள் தைத்ததைக்கூட
பொறுப்பெடுக்காமல் நடந்து நெருங்கினேன்
என் வீட்டை பழைய நினைவுகளுடன்.
வாசலில் வரவேற்ற வேப்பைமரத்தில்
என்பெயரைப் பார்த்ததும்
என்பெயரைப் பார்த்ததும்
கையில் பிரம்பெடுத்து துவாயில்
சேலை கட்டி எனக்குத்தெரிந்த
டிப்லோமா A,B,C,D யை அந்த
சின்ன வேப்பை மரத்திற்கு அடித்தடித்து
சொல்லிக்கொடுத்ததை நினைத்து சிரித்தபடி
நுழைகின்றேன் வாயிற் கதவை திறந்தபடி
சேலை கட்டி எனக்குத்தெரிந்த
டிப்லோமா A,B,C,D யை அந்த
சின்ன வேப்பை மரத்திற்கு அடித்தடித்து
சொல்லிக்கொடுத்ததை நினைத்து சிரித்தபடி
நுழைகின்றேன் வாயிற் கதவை திறந்தபடி
அன்பாய் யாரோ என் தோள்களை
தொட்டு செல்ல திரும்பிப் பார்க்கின்றேன்.
ஆசையாய் ஊஞ்சல் கட்டி ஆட
இடம் தந்த ஆல மர மாமா.
தொட்டு செல்ல திரும்பிப் பார்க்கின்றேன்.
ஆசையாய் ஊஞ்சல் கட்டி ஆட
இடம் தந்த ஆல மர மாமா.
நான் தேன் குடித்த எக்ஸ்சோறா மலர்கள்,
முடியே இல்லாத காலத்தில் மலர்
கொடுத்த மல்லிகை பந்தல் எல்லாமே
பற்றைக்காடாய்
முடியே இல்லாத காலத்தில் மலர்
கொடுத்த மல்லிகை பந்தல் எல்லாமே
பற்றைக்காடாய்
சிப்பிக்குள் இருக்கும் முத்தை எடுத்த
பின் யாரும் சிப்பியை கவனிப்பதில்லை
என்று என்னயே பரிதாபமாய் பார்த்துக்கொன்டிருந்தத
என் பாழடைந்த வீட்டு தூண்களை
பிடித்தபடி உள் நுழைகின்றேன்.
பின் யாரும் சிப்பியை கவனிப்பதில்லை
என்று என்னயே பரிதாபமாய் பார்த்துக்கொன்டிருந்தத
என் பாழடைந்த வீட்டு தூண்களை
பிடித்தபடி உள் நுழைகின்றேன்.
திறந்ததும் கதவின் பின்னால் ஒளிந்து
நின்று பூச்சாண்டி காட்டவேண்டும் போல்
இருந்தது என் பழைய பழக்கத்தில்.
ஆனால் தனியே நின்று கொண்டு
என் விதி செய்த பூச்சாண்டியை நினைத்துக்கொள்கின்றேன்..
நின்று பூச்சாண்டி காட்டவேண்டும் போல்
இருந்தது என் பழைய பழக்கத்தில்.
ஆனால் தனியே நின்று கொண்டு
என் விதி செய்த பூச்சாண்டியை நினைத்துக்கொள்கின்றேன்..
நின்ற படியே நோட்டம் விடுகின்றேன்.....
எப்போதும் துங்கும் என் பாட்டிக்கு
மட்டுமே சொந்தமாயிருந்த சாய்
மனக்கதிரை இப்போது சிலந்திக்கு
மட்டுமே சொந்தமாய
.
மட்டுமே சொந்தமாயிருந்த சாய்
மனக்கதிரை இப்போது சிலந்திக்கு
மட்டுமே சொந்தமாய
.
தங்கத்தால் அலங்கரித்த கலண்டர்
பெண்னை பார்த்து தென்னோலையால்
நகையணிந்து நான் எடுத்த போட்டோ,
மழை நீரை சேகரிக்க எனக்குதவிய என்
குடை இரன்டும் ஒரு மூலையில் கிடந்தது.
பெண்னை பார்த்து தென்னோலையால்
நகையணிந்து நான் எடுத்த போட்டோ,
மழை நீரை சேகரிக்க எனக்குதவிய என்
குடை இரன்டும் ஒரு மூலையில் கிடந்தது.
கார்த்திகையில் இரவிரவாய் கண்
விழித்து அணையாமல் பார்த்திருக்கும்
அதே சிட்டி விளக்கு அதே
யன்னல் ஒரத்தில் இன்னமும்.
எட்டி பார்க்கிறேன் வெளியெ.
விழித்து அணையாமல் பார்த்திருக்கும்
அதே சிட்டி விளக்கு அதே
யன்னல் ஒரத்தில் இன்னமும்.
எட்டி பார்க்கிறேன் வெளியெ.
மீன் குஞ்சென்று பத்திரமாய்
பிடித்து வந்து தவளை குஞ்சு
வள்ர்த்த தண்ணீ துரவில்
வெறும் புல்லுகள் மட்டும்
என் மனதை போல.
பிடித்து வந்து தவளை குஞ்சு
வள்ர்த்த தண்ணீ துரவில்
வெறும் புல்லுகள் மட்டும்
என் மனதை போல.
ஆணா பெண்ணா போட்டு பார்த்த
புல்லு பூக்கள்,
ஒட்டிப்பர்த்த சோளன் தாடி,
படுத்ததும் கீறிப்பர்த்த கரி மேசை,
அடுப்படியில் சீனி களவெடுக்க
திட்டம் தீட்டிய தீப்பெட்டி தொலை பேசி.
புல்லு பூக்கள்,
ஒட்டிப்பர்த்த சோளன் தாடி,
படுத்ததும் கீறிப்பர்த்த கரி மேசை,
அடுப்படியில் சீனி களவெடுக்க
திட்டம் தீட்டிய தீப்பெட்டி தொலை பேசி.
இப்படி நாலா பக்கமும்
நினைவுகள் நிளலிட மணிச்சத்தம்
கேட்டு திரும்பிப் பார்க்கிறேன்.
நினைவுகள் நிளலிட மணிச்சத்தம்
கேட்டு திரும்பிப் பார்க்கிறேன்.
பிற்ந்த நாளுக்குக்கு நான்
கழுத்தில் கட்டிவிட்ட மணியிடனும்,
வாயில் நான் வளியில் தவற
விட்ட PASSPORT உடனும் வந்து
என் காலடியில் நின்றது என்
வீட்டு நாய் ரோபோ.
மனதின் வார்த்தைகளை சொல்ல
முடியவில்லை என் பெலன்
முடியும் வரை அழுது முடித்தேன்
என் ரோபோவைக் கட்டிபிடித்து.
கழுத்தில் கட்டிவிட்ட மணியிடனும்,
வாயில் நான் வளியில் தவற
விட்ட PASSPORT உடனும் வந்து
என் காலடியில் நின்றது என்
வீட்டு நாய் ரோபோ.
மனதின் வார்த்தைகளை சொல்ல
முடியவில்லை என் பெலன்
முடியும் வரை அழுது முடித்தேன்
என் ரோபோவைக் கட்டிபிடித்து.
பட்டாம் பூச்சியை பெட்டிக்குள்
போட்டு நேரத்திற்கு சொர்க்கத்தை காட்டினாலும்
சில நாட்களில் செத்தது ஏன்
என்று அப்போது புரிய வில்லை
இப்போது புரிந்து கொண்டேன்.
போட்டு நேரத்திற்கு சொர்க்கத்தை காட்டினாலும்
சில நாட்களில் செத்தது ஏன்
என்று அப்போது புரிய வில்லை
இப்போது புரிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment