வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

செல்லிடத் தொலைபேசி


கடிகாரம் காலம் தவறினாலும்‍ - உன்
தவறவிடா "தவறவிடப்ட்ட அழைப்புகள்"-Missed Calls

காலையில் எழுந்ததும் நான் படிக்கும் - முதல்
கவிதை உன் "குறுந்தகவல்கள்"-SMS

தொலைவினில் இருக்கும் என் அன்புக்காதலை
அருகினில் கொண்டுவரும் என் "அன்புத்தபால்கரன்"-Message

செல்லமாக சிணுங்கும் கொலுசொலிபோல்
உன் "இசைப்பெட்டகம்"-Ringing Tone

காதலியவள் அழைப்பினில்..........
காதலியவள் அழைப்பினில்..........
என்று எனக்கு மட்டும் சொல்லும் உன்
"விசேட இசைப்பெட்டகம்"-Special ringing tone

நெடுந்தூர பயணத்திலும் நெஞ்சுக்கு இனிமையன
உன் இசைத்தட்டின் பாடல்கள்-MP3 Player

கைக்கு அடக்கமான நீ என் அன்புக்காதலி

No comments: