வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சின்னதாய் சில ஆசைகள்




கொம்பு வைத்து உனை படம் பிடிக்க
கோபத்தில் உன் ஆபீஸ் பைலை ஐ ஒளித்து வைக்க

திருட்டுதனமாய் உன்
மணி பேர்ஸ் யைய் திறந்துபார்க்க
என் கிளிக்கு உன்பெயரை
சொல்லி அழைக்க

உன் தோள் பல்லக்கில்
ஊரெங்கும் சுற்றி வர
என் தோட்டத்தோடு சேர்த்து
உன்னயும் நீரூற்றி குளிப்பாட்ட

கடும் மழையில் வயல் வரம்பில்
ஒரே குடையில் நனைந்து வர
கடற்கரையில் உன் கை விரல் பிடித்து
என் கால் தடம் பதிக்க

கனவில் கலைந்து செல்லும்
பட்டாம் பூச்சிக்குஉன் கதை சொல்ல
என் நிலவுலகில் உலவுகின்ற
காகித கப்பலில் பவனி வர

உன் சிரிப்பில் நான் சிரிக்க
உன் நோவை நான் ஏற்க
உன் மடியில்
உன் முகம் பார்த்து
என் உயிர் பிரிய...................

No comments: