வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

காலையில் வந்த அழைப்பு


இரவெல்லாம் கண்விழித்து இமை
மூடியிருந்தேன் இன்று காலைவரை

வேலைக்கு போகவேணும் இன்னும் எழும்பலயா?
என்று செல்லமாக தொடங்கினாய்...

நானும் Good morning செல்லம் என்றேன்
எனக்காக ஒன்று செய்வாயா?என்றாய்

உனக்காகத்தானே நான் இருக்கிறேன் என்றேன்.

ஒரு நாய்.....
இரண்டு கிளி
இரண்டு புறா
கொங்சம் love birds வேண்டும் என்றாய்,

நானும் விளையாட்டாக எப்போது என்றேன்

"நாம் இருவரும் கல்யாணம் செய்த பிறகு" என்றாய்

செல்லப்பிராணியிடம் அவ்வளவு விருப்பமா என்றேன்
இல்லடா என் செல்ல குரங்கு.....

கிளிக்கு உன் பெயர் சொல்லப்ப்ழக்குவேன்...
lateஆ வீட்டுக்கு வந்தாய் என்றால்
ஏண்டா lateஆ வாறா.......எங்க போனா இவளவு நேரமும்
என்று கிளி உனக்கு திட்டட்டும் என்றுதான்...
எண்ட தங்கம் என்றாய்

அது போகட்டும் நாய் என்டால் உனக்கு கொள்ளை
விருப்பமா என்றேன்........தயக்கத்தோடு

ஓமோம் கொள்ளை விருப்பம்.......
ஆகலும் lateஆ வீட்டுக்கு வந்தால் வெளியேதானே நிற்பாய்
அப்ப உனக்கு உதவிக்கு என்றாய்

பிறகு நீயாக சொன்னாய் புறாவும் Love Birds உம்
நீ வரும்வரை என்னுடன் உதவிக்கு என்று

நீயும் நானும் வாழ ஒரு Room,ஒரு Kitchen,
ஒரு Bed room,ஒரு bath room போதும் என்றாய்
இருவரும் வாழ இதயமெனும் வீடு போதாதா என்றேன்...

போதுமடா போதும் கெதியா ready ஆகு வேலைக்கு
போக நேரமாகுது......

Eavening கதைப்போம் என்றாய்

நானும் Ok bye...என்றேன்


No comments: