வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

விடை கூறு




உனக்கு தொழில் கிடைக்க எனை பட்டினியாக்கி
இரவிரவாய் இருபது நான்கு மணி நேரம்
இறைவனுடன் போராடய‌ போதும் - நீ
தூக்கி எறிந்து கதைத்த போதும் உனை
தூக்கி சுமக்க விரும்பினேன் - ஒரு தந்தையாக


விபத்தில் விளூந்த போதும் விரல் பிளந்து
இரத்தம் சிந்திய பொதும்
நீ கூலி வேலை செய்தபோதும் என் கண்ணீரால் கடவுளின்
நீர் தொட்டிக்கு நீர் பாய்ச்சிய‌ போதும்
வீடு வீதிகளாய் உனை தேடி அலைந்தபோதும்
தேற்றிக்கொண்டேன் எனையே உன் சகோதரதனாய்


தொட்டதற்கெலாம் சினுங்கிகொன்டு
மிட்டயாவது வாங்கிகொன்டு ஒரு முறை எனை
பார்க்க வரமாட்டாயா என்ற போதும்
அடித்த கை அணைக்காதா என்ற போதும் சிறிது
சிறிதாய் செர்த்துவைத்து என் படிப்பை விட உனக்கு
ஏதாவது வாங்கி தர வேன்டும் என்ற போதும்
ஒரு வாய் சோறு உன் கையால் கிடைத்தபோதும்
வாழ்ந்துபார்த்தேன் உன் சகோதரியாய்

கோபித்த உனை கதைக்க வைக்க
அடிபட்டு இரத்தம் நனைத்த போதும்
என் உயிர் கூட தர துடித்தபோதும்
சுற்றத்தார் சுற்றி அடித்தபோதும்
நிழலாய் நீ தொடர்வாய் என
பெருமையோடு நின்றேன் உன் நண்பியாக..

Iron பண்ணி உடுத்திக்கொள், தலை முடி வெட்டதே
வெயிலில் போகாதே, தினமும் தலை முழுகாதே
அதிகம் தண்ணீரில் நிற்காதே, எண்ணை வைக்க மறக்கதே என்று
உன் கால் நகம் மட்டும் பார்த்துக்கொன்டேன் உன் நலன் விரும்பியாய்

நான் தந்த பொருளை திருப்பி தந்தபோதும்
கண்ணீரும் சேர்ந்த்து நீ தந்த தேநீரை குடித்த போதும்
பேரூந்த்தில் உன் கை பார்த்து விடை பெற்றபோதும்
நீயே போகிறாயா என்ற போதும் உன் முகம் மட்டும்
பார்த்து போய் விடுகின்றேன் என்ற போதும்
தேற்றிக்கொன்டேன் எனை உன் வீட்டு நாயாய்


எந்த வேளையிலும் உன் மனைவியாக இருக்க வில்லை என்றா
நீயாக மனைவியை தேடிக்கொன்டாய்.......

யார் எது கூறினாலும் உனை காப்பாற்றவேண்டும் நீ
சந்தோசத்தை மட்டும் காண்வேண்டும் என்று இப்போழுதும் சிலுவைகளாளை சுமந்துமடிய‌ விரும்புகின்றது என் மனது உன் தாயாக

No comments: