வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌

வாழ்க்கையில் எல்லாருக்குமே மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கும்.எனக்கும் அப்படி பல இருந்தாலும் நேற்றைய நாளில் நான் பார்த்த அந்த காட்சி என்னையும் சில நிமிடம் யோசிக்க வைத்தது



ஒரு வாலிபன் கண்ணாடி துண்டுகளையை உடைத்து உண்டு தன் பசியை போக்கிக்கொண்டிருந்தான்.கண்டதும் ஆடிப்போனேன். எங்கள் வேலை நேரத்திலும் அவனை பார்க்காமல் கடந்துபோக முடிய வில்லை..

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதை பாடத்தில் படித்திருக்கிறேன்.ஆனால் முதல் முறை நேரில்...

வீட்டில் யாரும் தன்னை கவனிப்பதில்லை.தன் பசியை தீர்த்துக்கொல்ல/கொள்ள எப்படி ஒரு வழி என்று சாதாரணமாக சொல்லிகொண்டான்.

ஒரு செக்கன் அதை பார்த்திருந்தாலும் 48 மணித்தியாலங்கள் யொசிக்க வைத்தது...சிறிய‌ முள்ளூ ஏறி விட்டாலே எப்ப‌டி துடித்து போகின்றோம்...

சாப்பிட த‌ட்டு நிறைய உண‌விருந்தாலும் உப்பில்லை புளி இல்லை என்று எத்த‌னை குறை பாடு...
இறைச்சி, மீன் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்கின்ற‌ குழந்தைக‌ள், அப்ப‌டி ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்திய‌ பெற்றோர் ‌ ‌எத்த‌னை பேர்.....
என் முக‌ அழ‌கு குறைந்துவிடும், என் உட‌ல் ப‌ரும‌ன் ஏறி விடும் என்று உண‌வின் அருமை தெரியாதோர் எத்த‌னை...எத‌த‌னை........
சிறிய‌ த‌லைமுடி இருந்தால் சாப்பாடை தூக்கி எறியும் க‌ண‌வ‌ன் மார் எத‌த‌னை.....

இது ஒரு புற‌மிருக்க‌...அவ‌னை வேடிக்கை பொருளாக போட்டோ, வீடியொ எடுத்த‌வ‌ர்க‌ள் ........எத்த‌னை வித‌மான் ம‌னித‌ர்க‌ள்....

இதை வாசிக்கின்ற‌ உஙகளுக்கு சிறிய‌ வேண்டுகோள்...வீண் விரையம் செய்ய முன், இவ‌ர்களைப் ப‌ற்றி ஒரு நிமிட‌ம் யோசிப்போமா.................
உல‌க‌ம் மாற, முத‌லில் நாம் மாறவேண்டும்.

No comments: