பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரெ.....
என்னும் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள்,என்னவென்று சொல்வது "அனுப்பும் கடிதத்துக்கு ஒட்டும் முத்திரை போன்றது".முத்திரை இல்லா விட்டால் அது செல்லாது(போகாது அல்லது பெறுமதி அற்றது).
இந்த படமும் காதலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது இருந்தும் அது சொல்லப்பட்ட விதம் முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்படுகிறது. பார்ப்பவர்களை எல்லாம் 50 வருடங்களிற்கு முன்னர் கொண்டு போய் சேர்த்திருக்கிறது.அந்த கால கதைகளை செவி வழியாக கேட்ட எங்களுக்கு உண்மையாகவே கண்களின் முன் நிழலை நிஜமாக்கி இருக்கிறது இந்த மதராச பட்டினம்.
ஆயிரம் கதைகள் எழுதலாம்,பாடல்கள் எழுதலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுப்பது இயக்குனரையே சாரும,அந்தவகையில் எங்களை எல்லாம் ஈர்த்து எடுத்த ஒரு வசனம் இதை டைரெக்டர் சொன்ன விதம்,பூக்கள் பூக்கும் தருணம்........எனும் பாடல் வரிகள் துவங்கும் முன்னர் "மறந்துட்டியா".என்று நாயகி கேட்கும் பொது நாயகன் பார்த்து வியப்படைவது.காதலை வழ வழ என்று சொல்வதில் அர்த்தம் இல்லாது வெறும் கண்களினால் சொல்லி இருப்பது மிகையாகாது.
மேலும் நான் படத்தைப்பற்றி சொல்வதை விட இந்த பாடலை பற்றி சொல்வது படத்தின் சிறப்பிற்கு உறுதி சேர்க்கும் என்று நினக்கிறேன்,
இந்த பாடலின் வரிகளை கூர்ந்து கவனியுங்கள்,இரண்டு இதயங்கள் பரிமாறும் மூன்றாம் உயிர் அதுதான், காதலை மிகைப்பட சொல்லி இருக்கிறது.ஊண்மையில் நா.முத்துக்குமார் கவிதையை காதலித்தானா இல்லை காதலை காதலித்தானா? அற்புதம்! அற்புதம்! மிக மிக அற்புதமாக எழிமையான வசன நடையிலே எல்லோரது இதயங்கலிலும் ஆணி வைத்து மாட்டி விட்டான்.காதலை புனிதமாகவும் பொருள் படவும் பொறுப்பாக 100% அலுப்பில்லாமல் சொல்லியிருக்கிறார்.எனது வாழ்த்துக்கள்
அவருக்கு நான் வழங்கும் பெயர் "நா" முத்துக்குமார்.(முத்தான வார்த்தைகளை தரும் நாக்கின் குமரன்").
அத்தோடு இந்த பாடலின் இசை எலோருடைய மனங்களிலும் நீங்காத அளவிற்கு,
தான தோம்த தன, தான தோம்த தன, தாரேன தோம்தா என்று ஆரம்பமாகி அனைவரினதும் மனங்களிலும் ஆனந்த தாண்டவம் ஆடுகின்றது.
எல்லோராலும் கவரப்படும் இசை அமைப்பாளர்களில் இவரும் ஒரு இடம் பிடித்து விட்டார்.மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் குவியல்கள் இணயத்தளம் சார்பாக.
இதுபோல் இன்னும் ஒரு பாடல் தரமாட்டீரோ.
எல்லாவற்றிற்கும் மேலாக,
ஓளிப்பதிவு மிக அழகாக இருக்கிறது.பார்ப்பவர்களின் கண்களிற்கு விருந்து கொடுத்தது போல திருப்தி அடைய மனசாற இருக்கிறது.
காட்சி அமைப்பு 1947 களிற்கே எங்களை கொண்டு போய் விட்டத்து.
எந்தவித கலக்கமும் இல்லாமல் உடைகள்,வாகனங்கள்,வண்டிகள்,இடம் என்று எல்லாவற்றையுமே 1947 களில் உள்ள வாறே காட்டி இருக்கிறார்கள்.வியக்க வைக்கிறது இந்த காட்சி அமைப்பு.
தமிழர்களை உலகிற்க்கு காட்டிக்கொண்டு இருக்கும் அம்சங்களில் தென்னிந்த்திய சினிமா என்பதில் எந்த ஐயமும் இல்லை.
என்னடா இவன் நாயகி நாயகனை சொல்ல வில்லயே என்று கேட்கிறீர்களா,இருவரும் அனுபவித்து நடிக்க வில்லை 1947 களின் வாழ்க்கையை வாழ்ந்த்திருக்கிறார்கள் என்பது சாலச்சிறந்தது
ஒருமுறை ஓய்வான நேரம் நன்றாக ரசித்து பாருங்கள்,வசமாகி விடுவீர்கள்
என் மனதை தொட்ட பாடல் வரிகள்,இசை,காட்சி அமைப்பு என்ற வகையில் இந்த மதராச பட்டின பாடலும் என் மசின் பட்டினம்தான்








No comments:
Post a Comment