வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

கேதீச்சர நாதன்

உண்மை என்ற சொல்லின் பொருளான இறைவன் உலகங்களை குறைவிலாது வாழவைக்க ஆலயம் என்னும் மனையில் தூய்மை,பக்தி,அருள் என்னும் அன்பளிப்புடன் காத்திருக்கிறார்.அவ்வாறாக இறைவன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் சிறப்பு பெற்ற திருத்தலமாக திருக்கேதீச்சர ஆலயமும் விழங்குகிறது

மூர்த்தி, தலம்,தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புக்களை இவ்வாலயம் கொண்டுள்ளது.இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இவ்வாலயம் அமையப்பெற்றுள்ளது.மன்னார் தீவினை வட மாகாணத்தின் நிலப்பரப்புடன் இணைக்கும் பாலத்தின் மார்க்கமாக மன்னார் நகரிலிருந்து 10.5 கிலோமீற்றர் தூரத்திலும் வடமேல் கரையோரத்திலிருந்து 3/4 கிலோமீற்றர் தூரத்திலும் பாலாவி தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது

இலங்கையிலுள்ள ஆலயங்களிலே தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் என்னும் சிறப்பு பெற்று விழங்குகிறது.திருஞ்ஞானசம்பந்தமூர்த்தி நாயனர்,சுந்தரமூத்தி நாயனர்,இராமேஸ்வரத்தை வழிபட்ட பின்னர் அங்கிருந்தவாறே இவ் ஆலய சிறப்பு பற்றி பாடல்கள் பாடியுள்ள‌னர்

ஆலய இறைவன் பெயர் "கேதீச்சர நாதன்",இறைவியின் பெயர் கெளரி அம்பாள் தலவிருட்சம் வன்னி மரம்.இவ்விறைவன் சிறப்பினை சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் பின்வருமாறு புலப்படுத்தியுள்ளார்
"ஊனத்துறு நோய்களடியார் மேல் எழுந்தருளி,வய்ய வினயாயவடியார் மேல் ஒளிந்த்தருளி......."
மேலும் "மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி........" எனவும் இத்தல இறைவன் புகள் பறை சாற்றப்படுகின்றது
மேலும் சுந்தரர் கேதீச்சர நாதனை "அட்டன்,சிட்டன் என வெகுவாக சிறப்பித்தும் பாடியுள்ளார்"

சுந்தரர் திருவெண்ணை நல்லூரில் தம்மை ஆட்கொண்ட இறைவனும்,கேதீச்சர நாதனும் ஒருவரே எனவும் தமது பாடல்களிலே குறிப்பிட்டுள்ளார்.
"தேவன் என ஆழ்வாண் திருக்கேதீச்சரத்தானே"என்னும் பாடலின் வரிகள் விடயத்தை வலுப்பெறச் செய்கின்றன‌

மேலும் சம்பந்த மூர்த்தி நாயனார் அவர்கள் "கேதீச்சர நாதரை கைதொழ கடுவினை அடையாவே"என தமது பாடலில் கேதீச்சர நாதனின் புகழை மெய்ப்பித்துளார்.
திருக்கேதீச்சர திருத்தலம் ஆதியில் கேதுவினால் வழிபடப்பட்டமையால் திருக்கேதீச்சரம் எனும் சிறப்புப் பெயர் தோன்றியது என புராண வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
திருக்கேதீச்சர ஆலய சிறப்பு கூறும் நூலாக "தட்சிண கைலாய புராணம்" விளங்குகிறது.முன்னைய காலத்தில் ஆதிசேட‌னுக்கும் வாயு பகவானுக்குமிடையில் போர் மூண்ட வேளையில் ஆதிசேடன் மகாமேரு மலைக்குள் மறைய வாயு பகவான் மேரு மலையின் மூன்று சிகரத்தையும் தூக்கிச்சென்றான் அதில் ஒன்றை திருக்கேதீச்சரத்தில் வைத்தான் என்றும் இந்நூல் கூறுகின்றது

நீலக்கடலை எல்லையாகவும் இயற்கை அழகுதனை தன்னகத்தே கொன்டு வெளிப்பிரகாரம்,உட்பிரகாரம்,இடைப்பிரகாரம் என ஆகம முறைப்படி அமைந்த திருத்தலம் இதுவாகும்

இத்தலத்தின் தீர்த்தம் "பாலாவி" ஆகும்.இந்த தீர்த்தத்தின் சிறப்பு பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் "பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவி" என்றும் "பரிய திரை எறியாவரு பாலாவி" என்றும் பாலாவியின் சிறப்பினை பெருமை கூட்டியுள்ளார்.இவ்வாலயத்தில் ஆடி அமாவாசையில் பலர் பிதிர்க்கடன் செய்வதுண்டு.இந்த தீர்த்தத்தை வெள்ளிக்குடங்களில் எடுத்து மேற்குப்புற மஹாலிங்கத்துக்கு அபிடேகம் செய்வர்.
தற்போதுள்ள திருக்கோவிலின் சிவபெருமானை இலிங்க மூர்த்தியாக பிரியாது எழ்ந்தருளியுள்ளார்.சுவாமி சந்நிதி வடக்கு நோக்கியும்,அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி காணப்படுகிறது.சந்நிதியில் ஐந்து அடுக்கு நிலையினை கொண்ட இராஜகோபுரம் காணப்படுகிறது.இக்கோபுரங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன‌

இராஜகோபுரத்தின் இடது பக்கத்தில் மணிக்கோபுரம் காணப்படுகிறது.சூரிய,சந்திர சந்நிதி,சனீஸ்வர ஆலயம்,ந‌வக்கிரக மண்டபம்,சண்டேஸ்வரர் கோயில் என்பனவும் உன்டு.இவற்றோடு வினாயகர்,ஆறுமுக சுவாமி,மஹாலக்ஷ்மி,பஞ்ஜலிங்க கோயிலும் உட்பிரகாரத்தினை அலங்கரிக்கின்றன.

ஆலய இராஜ கோபுரத்திற்கு முன்னல் சோழர்கால மஹா சந்நிதி ஒன்று உள்ளது.சமயகுரவர்கள்,சேக்கிளார் ஆகியோரும் பிரதிஸ்டித்துள்ளனர்.பூசை முறைகளை எடுத்துக்கொண்டால் தினமும் அறுகாலப் பூசையும் நடை பெறும்.பங்குனி உத்தரத்திலும்,விசேட தினங்கலிலும் திருவிழா,விசேட பூசைகள் இடம்பெறும்.இவ்வாலயத்தின் பூசை முறைகளின் தனிச்சிறப்பாக "கோமாதா பூசை,திருமுறைப்பூசை" என்பன சிறப்பானவை
இவ்வாலயத்தின் மகோற்சவம் வைகாசி மாத விசாகத்திற்கு பத்து நாள் முன்பதாக ஆரம்பித்து வைகாசி விசாகத்தன்று தீத்தோற்சவம் இனிது நிறைவு பெறும்.அடுத்த நாள் மெளன உற்சவம் நடைபெறுவதோடு பஞ்சரதங்கள் பவனி வருகின்றன.மேலும் இக்காலத்தை விட சிவராத்திரி என்றால் இலங்கையிலே பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மக்கள் இந்த ஆலயம் நோக்கி வருகின்றனர்

இந்த ஆலயத்தின் வரலாற்றை தட்சிண கைலாய புராணம் மட்டுமன்றி,மந்தைப்பள்ளு என்ற நூலும்,திருக்கேதீச்சரநாதன் ஊஞ்சல்,திருக்கேதீச்சர புராணம் ,திருக்கேதீச்சர நாயகி பிள்ளைத்தமிழ்,திருக்கேதீச்சர நாதர் பிள்ளை விடு தூது போன்ற பிரபந்தங்கழும் திருக்கேதீச்சர ஆலய பெருமயினை வேரூன்றச்செய்கின்றது.
இவ்வாறாக மூர்த்தி,தல,தீர்த்த சிறப்பினை தன்னகத்தே கொன்ட தலமாக விழங்குகிறது.

"சைவம் செழிக்க,
அன்பு பெருக,
ஓற்றுமை ஓங்க,
மனிதம் என்னும் உண்மைத்தன்மையில் உலகம் இயங்க,
திருக்கேதீச்சர நாதா உன் அருள் என்றும் வேண்டும்".

No comments: