தென்றல் தரும் சோலையே கொஞ்சம் சிரிப்பை
சில்லறையாய் சிதறவிடு
மார்களித்திரள் மேகமே நீயும் ஏன் மழலையாய்
பொழிகிறாய் சொல்லாமலே
கண்களில் ஏன் இந்த சாரல் கண்மணி
உனக்ககேன் இந்த கோலம்
இதயவறைகள் எல்லாம் நீ மட்டும் இருக்கும்போது
இனியென்ன கலக்கம்
இடிவிழுந்த போதும் இஞ்சளவும் நகராத நீ
இந்த சிறு பிரிவிற்கா கலங்குவது
போகும்போது பெண்ணே என்னிடம் உன் வேதனை
என்னவென்று கிள்ளிச்செல்லு
கலங்காதே கண்மணி வருவேன் நானும் உரிமையோடு
உன்னை கரம் பிடிக்க..........